உலகம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு... அமெரிக்கா கவலை

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு... அமெரிக்கா கவலை

Rasus

இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திடீரென தேர்தல் நடத்தப்படுவது கவலை தருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவிவந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திடீரென தேர்தல் நடத்தப்படுவது கவலை தருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைப்பு, இலங்கையில் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் என அமெரிக்க அரசின் டுவிட்டர் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்புகளை இலங்கை அரசு மதிக்க வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இலங்கை அரசு தன் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதற்கு தர வேண்டிய நிதியுதவிகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கான எம்பிக்கள் குழுவின் தலைர் எலியட் எங்கல் எச்சரித்துள்ளார்.