உலகம்

'போர்னோகிராஃபி'.. ஆபாசப் படங்களை பார்ப்பதற்காகவே பிரத்யேக 'கோர்ஸ்'- அமெரிக்காவில் அறிமுகம்

ஜா. ஜாக்சன் சிங்

ஆபாசப் படங்களை பார்ப்பதற்காகவே அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் பிரத்யேக படிப்பு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் இயங்கி வருகிறது வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் நடப்பு நிதியாண்டுக்காக ஒரு புதிய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'போர்னோகிராஃபி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படிப்பானது முழுக்க முழுக்க ஆபாசப் படங்கள் தொடர்பான பாடம் ஆகும். அதன்படி, இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு விதவிதமான ஆபாசப் படங்கள் காண்பிக்கப்படும். மாணவர்களும், பேராசிரியர்களும் சேர்ந்து இந்த ஆபாசப் படங்களை பார்ப்பார்கள். பின்னர், மாணவர்கள் தாங்கள் பார்த்த ஆபாசப் படங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் இந்த பாடத்திட்டத்தின் சாராம்சமாகும். இந்த படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் வெவ்வேறு விதமான மனித இனங்கள் (ரேஸ்) இருக்கின்றன. ஒவ்வொரு இனத்திலும் பாலியல் உறவு எங்கனம் வேறுபடுகிறது; அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள இந்தப் படிப்பு உதவும். அதேபோல, சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் இந்தப் பாடத்திட்டம் வழிவகுக்கும். உண்மையில், இது ஒரு ஆக்கப்பூர்வமான படிப்பு" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், ஒருதரப்பினர் இந்தப் படிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.