உலகம்

விண்வெளியில் பறக்க சொந்தமாக SpaceX விமானத்தை வாங்கிய அமெரிக்க கோடீஸ்வரர்

விண்வெளியில் பறக்க சொந்தமாக SpaceX விமானத்தை வாங்கிய அமெரிக்க கோடீஸ்வரர்

EllusamyKarthik

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் 38 வயதான Jared Isaacman. தொழிலதிபர், விமானி என பன்முக திறன் கொண்டவர் அவர். ஷிப்ட்4பேமெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அவர் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர். தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மிஸ்க் நடத்தி வரும் SpaceX நிறுவனத்திடமிருந்து சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். 

“சுமார் நான்கு பேர் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும். அதில் நான் உட்பட மேலும் மூவர் புவி வட்டப்பாதையை இந்த விமானத்தை கொண்டு சுற்றி வர உள்ளோம். அதில் இரண்டு சீட்கள் நிரம்பிவிட்டன. மீதமிருக்கும் ஒரே ஒரு சீட்டில் பயணிப்பதற்கான நபரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க உள்ளேன். இந்த பயணத்தில் மூலம் திரட்டப்படும் நிதியை புனித ஜூட் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் கொடுக்க உள்ளேன். அடுத்த 50 - 100 ஆண்டுகளில் உலக மக்கள் விண்கலத்தில் பறந்து நிலவை குடும்பத்துடன் சுற்றி வருவதெல்லாம் சாத்தியமாகும்” என Isaacman தெரிவித்துள்ளார். 

இந்த பயணத்தில் மூலம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் திரட்ட உள்ளார். அதில் 50 சதவிகித நிதியை அவரே கொடுக்கிறார். இந்த ஆண்டே புவியை சுற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.