Model image google gemeni
உலகம்

24 மணி நேரத்தில் 2,400 உடல்கள்.. புதைகுழிகளைத் தோண்டிய அமெரிக்கா.. பின்னணியில் ஈரான் போர்?

அமெரிக்க இராணுவம் போர்க்களத்தில் உயிரிழக்கும் வீரர்களைத் தற்காலிகமாகப் பெருங்குழிகளில் அடக்கம் செய்யும்பயிற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

Prakash J

ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்கியது. இருப்பினும் தொடக்கத்தில் உயிரிழப்புகளையும் சேதங்களையும் சந்தித்த ஈரான் தற்போது அந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர், ஜூன் மாதப் போர் நிறுத்தத்துக்குப் பிறகும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அக்டோபர் இறுதியில் மீண்டும் ராணுவத் தாக்குதலுக்கான நடவடிக்கைகள், கப்பல் போக்குவரத்துப் பதற்றம், தோல்வியடைந்துவரும் பேச்சுவார்த்தைகள் ஆகியவை மத்திய கிழக்கில் அடுத்தகட்டப் போர் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், போரில் கொல்லப்பட்ட சக வீரர்களைப் புதைப்பதற்காகப் பெருங்குழிகளைத் தோண்டுவதற்கு அமெரிக்க ராணுவம் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஈரான் மீது ஒரு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை தொடங்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் வேளையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. நியூஸ்வீக் பத்திரிகையின்படி, தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டால், அமெரிக்கப் படைகள் எவ்வாறு பதிலளிக்கும் என்பதற்கான ஒரு ஒத்திகையாகவே இந்த இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

வட கரோலினாவின் ஃபோர்ட் பிராக்கில் அமைந்துள்ள 3வது படைப்பிரிவு பராமரிப்பு கட்டளை மற்றும் 20வது பொறியாளர் படைப்பிரிவின் வீரர்கள், அத்துடன் இராணுவ மதகுருக்கள் போன்ற மத ஆதரவுப் பணியாளர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றதாக அமெரிக்க இராணுவம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. D6 புல்டோசர்கள் மற்றும் கனரக அகழ்வு இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்தக் குழிகள் தோண்டப்பட்டன. சுமார் 20 உடல்களை அடக்கம் செய்யும் குழியைத் தோண்ட சராசரியாக 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆனதாகக் கூறப்படுகிறது. அதன்படி, 24 மணி நேரத்தில் சுமார் 2,400 உடல்களை அடக்கம் செய்யும் வகையில் குழிகளை உருவாக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Model image

ஏறக்குறைய 37,000 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்1950–1953 கொரியப் போருக்குப் பிறகு, அமெரிக்க ராணுவம் போர்க்களத்தில் உயிரிழக்கும் வீரர்களைத் தற்காலிகமாகப் பெருங்குழிகளில் அடக்கம் செய்யும் பயிற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின்போது உயிரிழந்த வீரர்களைப் போர்க்களத்திலேயே தற்காலிகமாகப் புதைக்கும் வழக்கத்திற்குப் பதிலாக, அவர்களின் உடல்களை சில நாட்களிலேயே அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பும் 'Concurrent Return Program' என்ற துரித மீட்பு நடைமுறையையே அமெரிக்க ராணுவம் முழுமையாகப் பின்பற்றியது கவனிக்கத்தக்கது.