உலகம்

`தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ராணுவ வீரர்கள் உடனடி பணி நீக்கம்’ -அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அமெரிக்க ராணுவத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று கடுமையாக உள்ள நிலையில் தடுப்பூசி பணிகள் மந்தமாகவே நடைபெறுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ராணுவத்தினர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3,000 பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடற்படை, விமானப்படையை சேர்ந்த சுமார் 650 வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவை பொறுத்தவரை, மதம் மற்றும் மருத்துவ காரணங்களை கூறி அமெரிக்காவில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பது குறிப்பிடத்தக்கது.