யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்காவை அடுத்து இஸ்ரேலும் அறிவித்துள்ளது.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா கூறி வந்தது. இதையடுத்து யுனெஸ்கோவின் செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தது. இதனால் அமெரிக்கா யுனெஸ்கோவில் இருந்து விலகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரேலும் விலகப் போவதாக அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், அறம் சார்ந்த துணிச்சலான முடிவு என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது.