உலகம்

ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: பெட்ரோட் டீசல் விலை உயர்வு

jagadeesh


சர்வதேச அளவில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 11 காசுகள் விலை உயர்ந்து 78 ரூபாய் 39 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 16 காசுகள் விலை அதிகரித்து 7‌2 ரூபாய் ‌28 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 4‌ சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 2 டாலர் 41 செண்ட் அதிகரித்து ஒரு பீப்பாய் 68.66 டாலராக அதிகரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலின் எதிரொலியே கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெட்ரொல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.