உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துருக்கி ஒப்புதல்

jagadeesh

அமெரிக்காவின் தலையீட்டை தொடர்ந்து வடக்கு சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

சிரியாவின் வடக்குப் பகுதியில் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்த குர்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் திடீரென அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றார். இதனை பயன்படுத்தி கொண்ட துருக்கி, குர்துக்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

துருக்கியின் ராணுவ நடவடிக்கையால் எரிச்சலடைந்த அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் துருக்கி சென்று அந்நாட்டு அதிபர் தயிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை அடுத்து 5 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக துருக்கி அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. குர்து படைகளும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.