உலகம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஓபியம் ஆலைகள் அழிப்பு

webteam

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஓபியம் ஆலைகளை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

நடப்பாண்டில் ஓபியம் போதை பொருள் உற்பத்தி 87 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாக அண்மையில் ஐ.நா. தெரிவித்திருந்தது. இதில் ஆப்கானிஸ்தானில் இருந்து மட்டும் சுமார் 9,000 மெட்ரிக் டன் போதைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு தேவையான நிதி கிடைப்பதாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து தலிபானின் ஓபியம் உற்பத்தியை முற்றிலும் அழிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் ஈடுபட்டள்ளன. போர் விமானங்கள் மூலம் ஓபியம் ஆலைகள் மீது குண்டுவீசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க படையினர், தாலிபான்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதச் சுரங்கங்கள் மூலம் தேவையான பணத்தை பெறுவதாகவும், அதுதவிர ஆள்கடத்தல், கொலைகள் போன்றவற்றின் மூலம் பணம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் முக்கிய பங்கு வகிப்பது போதைப் பொருட்கள் கடத்தல் என்பதால், முதலில் அதை ஒழிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.