ஜோ பைடன் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | செயற்கை நுண்ணறிவு ’சிப்’கள் ஏற்றுமதிக்கான புதிய விதி.. ஜோ பைடனுக்கு வேண்டுகோள்!

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு சில்லுகள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் புதிய விதியைக் கைவிட வேண்டும் என்று அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசை வலியுறுத்தியுள்ளன.

PT WEB

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு சில்லுகள் (AI Chips) ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் புதிய விதியைக் கைவிட வேண்டும் என்று அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசை வலியுறுத்தியுள்ளன.

amazon, microsoft

செயற்கை நுண்ணறிவு சில்லுகள் (AI Chips) தொடர்பாக அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள புதிய விதி நாளை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அமெரிக்காவிலிருந்து ஏறறுமதி செய்யப்படும் செயற்கை நுண்ணறிவு சில்லுகளை (AI Chips) யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளைப் பயன்படுத்தி சீன ராணுவம் வலுவடைவதைத் தடுப்பதற்காக இந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த விதி அமலுக்கு வந்தால் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு கணினிகளை விற்பனை செய்வது பாதிக்கப்படும என்றும் செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குலைய வழிவகுக்கும் என்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

ஜனவரி 20 அன்று டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில் தன்னுடைய பதவிக் காலத்தின் கடைசி நாள்களில் இத்தகைய விதியை ஜோ பைடன் கொண்டுவர முயல்வது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.