சீனாவில் ஆளில்லா விமானம் மூலம் பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் கொண்டு சேர்க்கும் நவீன தொழில்நுட்பம் பரீட்சார்த்த ரீதியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் நேரம் மிச்சமாவதால் வரவேற்பு அதிகரிக்க வாய்ப்பு.
முதல் கட்டமாக ஷாங்காய் மாகாணத்தில் உள்ள ஜின்ஷனா் தொழிற் பூங்கா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இந்த நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து, பிற மாகாணங்களுக்கும் ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கும் தொழில்நுட்பம் விரிவுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. வாகனங்களை விட, ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு செல்வதால், பெருமளவில் நேரம் மிச்சமாகிறது என்றும், வருங்காலங்களில் 70 சதவிகித அளவுக்கு இதன் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.