ஜெர்மனியில் யூனியன் பெர்லின் கால்பந்து அணியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் web
உலகம்

கால்பந்து ரசிகர்களின் கிறிஸ்துமஸ்.. மைதானத்தில் திரண்ட 28,500 ரசிகர்கள்!

ஜெர்மனியில் யூனியன் பெர்லின் கால்பந்து அணியின் ரசிகர்கள் 28,500 பேர் மைதானத்தில் திரண்டு கிறிஸ்துமஸை பாடல்களைப் பாடி கொண்டாடினர். 20 ஆண்டுக்கு முன் 89 ரசிகர்களுடன் தொடங்கி இன்று 28,500 ரசிகர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது..

PT WEB

ஜெர்மனியின் யூனியன் பெர்லின் கால்பந்து அணியின் 28,500 ரசிகர்கள் மைதானத்தில் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி பண்டிகையை கொண்டாடினர். 2003இல் 89 பேருடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்று பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. 1997ல் திவாலாகிய அணியை காப்பாற்ற ரசிகர்கள் நிதி திரட்டியதன் நினைவாக, இந்நிகழ்ச்சி குழு உணர்வை வெளிப்படுத்துகிறது.

ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான யூனியன் பெர்லின் அணியின் ரசிகர்கள் 28 ஆயிரம் பேர்மைதானத்தில் ஒன்றுகூடி, கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி உணர்ச்சிப்பூர்வமாக பண்டிகையைகொண்டாடினர்.

2003இல் வெறும் 89 ரசிகர்களுடன் தொடங்கிய இந்தகிறிஸ்துமஸ் பாடல்கள் நிகழ்ச்சி, இன்று 28 ஆயிரத்து 500 ரசிகர்கள் பங்கேற்கும்அளவுக்கு பிரமாண்ட நிகழ்வாக மாறியுள்ளது.

1997ஆம் ஆண்டு, யூனியன்பெர்லின் அணி திவாலாகும் நிலைஏற்பட்டபோது, ரசிகர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி அணியைக் காப்பாற்றினர். அப்போதிலிருந்து யூனியன் பெர்லின்அணியின் ரசிகர்கள், குழு உணர்வை பிரதிபலித்து வருகின்றனர்.