இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 450 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஹாங்காங்கில் கண்டெடுக்கப்பட்டது.
சீனாவின் வாங் சை மாவட்டத்தில் ரயில் பாதை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பூமியை தோண்டிய போது வெடிக்காத நிலையில் புதைந்து கிடந்த வெடிகுண்டை கண்டெடுத்தனர். வெடிகுண்டு செயலிழக்கச் செய்ய, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள சுமார் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து சாலை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்காத குண்டை செயலிழக்கச் செய்தனர். கடந்த சனிக்கிழமை இதேப்போல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.