சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த புள்ளிவிவரங்களை சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டில், நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8 சதவீதமாகவும், சீனாவில் வேலைவாய்ப்பின்மை 5.1 சதவீதமாகவும் இருந்ததாக சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
இந்தோனேஷியாவில் வேலைவாய்ப்பின்மை 5 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் 4.9 சதவீதமாகவும், அமெரிக்காவில் 4.2 சதவீதமாகவும் இருந்ததாக சர்வதேச நிதியம் கூறியுள்ளது. ரஷ்யாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2.8 சதவீதமாக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.