உலகம்

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ்

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ்

webteam

கொரோனா வேகமாக ப‌ரவிவருவதால், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி என ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

இத்தாலியில் முக்கிய இடமான lombardy-யில் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வைரஸ் பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தவர்‌களில்17 பேர் உயிரிழந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலும் கொரோனா மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், உயிரிழப்புகளை தடுப்பதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

பிரான்ஸில் கொரோனா பாதிப்பு முன்பை விட 16 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பது, அங்கிருப்பவர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.