உலகம்

"பேரழிவு அபாயத்தில் கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா" - ‌‌ஐ‌‌‌.நா எச்சரிக்கை

Sinekadhara

ஆப்ரிக்காவின் சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வறட்சி காரணமாக பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் வறட்சி காரணமாக ஒரு கோடியே 30 லட்சம் பேர் பசியில் தவிப்பதாகவும், 15 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தானிய விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதாகவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஐநா உணவு அமைப்பின் உயரதிகாரிளில் ஒருவரான ரீன் பால்சன் தெரிவித்தார். உணவின்றி வாடும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் உதவ உடனடியாக 130 மில்லியன் டாலர்கள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

’’ஆப்ரிக்காவின் கொம்பு’’ என அழைக்கப்படும் சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பகுதியில் பருவமழை தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.