உலகம்

"ஆப்கானில் மரணத்தின் விளிம்பில் லட்சக்கணக்கானோர் " - ஐ.நா. சபை செயலாளர் எச்சரிக்கை

கலிலுல்லா

ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா. சபை செயலாளர் ஆண்டனியோ குட்டாரஸ் எச்சரித்துள்ளார்.

ஐ.நா. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்கன் மக்களை காப்பாற்ற 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளிக்கும்படி சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்து, அங்கு பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியை தவிர்க்க வங்கி முறையை கொண்டு வருமாறு குட்டாரஸ் வலியுறுத்தி உள்ளார்.

மனித உயிர்களைக் காப்பாற்ற பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் குட்டாரஸ் வலியுறுத்தி இருக்கிறார்.