உலகம்

அமெரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா

அமெரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா

webteam

அமெரிக்காவின் ஐ.நா. சபை தூதராக பொறுப்பு வகித்து வரும் நிக்கி ஹாலே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் ட்ரம்பின் தோழியாகவும், ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராகவும் இருப்பவர் நிக்கி ஹாலே. வெள்ளை மாளிகையில் இருந்து வரும் பெரும்பாலான முக்கிய அறிவிப்புகளை நிக்கி ஹாலே தான் வெளியிடுவார். இதனிடையே, நிக்கி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் ட்ரம்பிடம் கடிதம் அளித்துள்ளார் என்ற செய்தி கசிந்தது.  

இந்நிலையில், நிக்கி ஹாலேவின் ராஜினாமா கடிதத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கான அறிவிப்பை வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தின் இன்று வெளியிட்டார். ஐ.நா. சபைக்கான அடுத்த அமெரிக்க தூதர் யார் என்பதை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தெரிவிக்கப்படும் என ட்ரம்ப் கூறினார்.

நிக்கி ஹாலே ஐ.நாவுக்கான அமெரிக்க தூதராக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக தெற்கு கரோலினாவின் ஆளுநராக ஹாலே பதவி வகித்து வந்தார். முதல் பெண்மணியாக அமெரிக்க தூதராக பதவி வகித்துள்ளார்.  

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு ட்ரம்பை எதிர்த்து போட்டியிட போகிறீர்களா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்தார் நிக்கி ஹாலே.