உலகம்

வடகொரியா மீது மேலும் புது தடைகள் விதிப்பு

வடகொரியா மீது மேலும் புது தடைகள் விதிப்பு

webteam

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை புதிய தடைகளை விதித்துள்ளது. 

வடகொரியாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட அம்சங்களில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 19ம் தேதி வடகொரியா நடத்திய அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை எதிரொலியாக இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெட்ரோலிய பொருட்கள் கிடைக்காமல் போகச்செய்வதன் மூலம் வடகொரியாவின் அணுஆயுத திட்டத்திற்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருதுகின்றன.