(மாதிரிப்படம்)
ஈரானில் 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டு விமானம் 180 பேருடன் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டு சென்ற சற்று நேரத்திலேயே
விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம்
விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவி வரும் நிலையில் விமான விழுந்து நொறுங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்து ஏன் நடந்தது என ஈரான் அரசு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது.