உலகம்

உக்ரைன் எல்லையில் போர் மேகம் - பாதுகாப்புப் படையினர் ஒத்திகை

JustinDurai

உக்ரைனின் எல்லைப்பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு கலவரம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

எல்லையில் அமைந்துள்ளா கலான்சக் நகரில் நடைபெற்ற ஒத்திகையில், காவல்துறை, தேசிய பதுகாப்பு படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மீட்புப் பணி பிரிவுகளை சேர்ந்த 1300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். வதந்திகளால் கலவரம் வெடித்தால் எப்படி சமாளிப்பது என்ற பயிற்சியில் வீரர்கள் இறங்கினர். கலவரங்காரர்களை கலைப்பது எப்படி, கலகத்தை தூண்டுவோரை கைது செய்வது மற்றும் கட்டட்டங்களை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்பது உள்ளிட்ட ஒத்திகைகள் நடைபெற்றன.

இந்த பயிற்சியில் எம்ஐ- 8 வகை ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று எல்லையில் அமைந்துள்ள பிற ஊர்களிலும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கொரோனா தடுப்பூசி கட்டாயமா?-நியூசி., கனடாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் போராட்டம்