உலகம்

அமெரிக்கா காட்டுத்தீயின் எதிரொலி - இங்கிலாந்து வானத்தில் ஆரஞ்சு நிறம்

Sinekadhara


அமெரிக்காவின் பற்றி எரிந்த காட்டுத்தீயின் புகை, அட்லாண்டிக் கடலைக் கடந்து, இங்கிலாந்து வானத்தில் ஆரஞ்சு நிறத்தில் பிரதிபலித்தது. மேலும் நிலவிலும் அதன் பிரதிபலிப்பு தெரியும் என இங்கிலாந்து வானிலை மையம் அறிவித்திருந்தது. அதேபோல் விசித்திரமான வண்ணமயமான மேகங்கள் மற்றும் நிலவை சிலர் கவனித்ததுடன், அதைப் புகைப்படம் எடுத்து தங்கள் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மகாணத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் பரவிய காட்டுத்தீயால், குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும் வாஷிங்டன் பகுதியில் பற்றிய காட்டுத்தீயால் 5 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 3.1 மில்லியன் ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளது. மேலும் இந்த தீ 4 மாதங்களில் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலர் வண்ணமயமான வானத்தைப் பார்த்து ஆச்சர்யமான கமெண்டுக்களை பதிவிட்டனர். சிலர் வேறு நாடு பற்றி எரியும்போது, அதில் ஆச்சர்யப்படுவது தவறு என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுத்தீயால் மேற்கு அமெரிக்காவில் பலர் காணாமல் போய் உள்ளனர்.