உலகம்

உடைகள் அத்தியாவசியமற்றவையா? அரசுக்கு இப்படியா எதிர்ப்பை காட்டுவது! மிரள வைத்த நபர்!

Sinekadhara

உடைகள் அத்தியாவசியமற்றவை என வேல்ஸ் அரசு அறிவித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளாடையுடன் கடைக்குச் சென்ற நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேல்ஸ் அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதித்திருக்கிறது. அதில் புத்தங்கள் மற்றும் உடைகள் போன்றவை அத்தியாவசியமற்றவை என அறிவித்திருந்தது.

அரசின் இந்தத் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கிறிஸ் நோடன் என்ற 38 வயது நபர் வெறும் உள்ளாடை மற்றும் மாஸ்க் மட்டும் அணிந்து நியூபோர்ட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருக்கிறார். பாக்ஸர் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்துகொண்டு அவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த வீடியோ இணையங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவை எடுத்த நபர் பாதுகாவலர்களிடன் ‘’துணிகள் அத்தியாவசியமற்றவைதானே. அவர் போகட்டும்’’ என்று கூறிக்கொண்டே செல்கிறார்.

இந்த கட்டுப்பாடுகள் குழந்தைகளின் உடைகள், படுக்கைகள் மற்றும் கெட்டில் போன்றவற்றையும் தடைசெய்துள்ளன. இந்தத் தடையை மாற்றியமைக்கக் கோரும் மனுவில் சுமார் 46,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.