உலகம்

கொரோனா காற்றில் கலந்த 20 நிமிடங்களில் பரவும் தன்மையை இழக்கிறது - பிரிட்டன் ஆய்வாளர்கள்

கலிலுல்லா

கொரோனா வைரஸ் காற்றில் கலந்த 20 நிமிடங்களில் பரவும் தன்மையை இழந்துவிடுகிறது என பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த பிரிஸ்டால் பல்கலைகழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மூச்சு காற்றில் இருந்து வெளியேறும் வைரஸ் காற்றில் கலந்த 20 நிமிடங்களில் பரவும் தன்மையை இழந்துவிடுகிறது எனக் கூறியுள்ளனர்.

குறிப்பாக முதல் 5 நிமிடங்களில் அதன் பரவும் தன்மை பெருமளவில் குறைந்துவிடுவதாகவும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது வைரஸ் பரவுவதில் இருந்து பெரும் பாதுகாப்பை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.