தங்கப்புதையதலை பெற்ற தம்பதி
தங்கப்புதையதலை பெற்ற தம்பதி ட்விட்டர்
உலகம்

இங்கிலாந்து | வீட்டை புதுப்பித்தபோது கிடைத்த 17ம் நூற்றாண்டு தங்கப்புதையல்; காத்திருந்த ஆச்சர்யம்!

Jayashree A

இங்கிலாந்தில் தம்பதியர்களுக்கு கிடைத்த புதையல்!

தெற்கு இங்கிலாந்தை சேர்ந்த தம்பதியொன்று, தங்கள் ஃபார்ம் ஹவுஸில் உள்ள சமையலறையை புதுப்பிக்கும் போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை கண்டறிந்துள்ளனர்.

பழங்கால நாணயங்கள்

பழங்கால இந்தியாவைப் பொருத்தவரை அந்நிய நாட்டினரின் படையெடுப்புக்கு அஞ்சிய மக்கள் தாங்கள் சேர்த்து வைத்த பொன்னையும் பொருளையும் தங்களின் வருங்காலத்திற்காக பூமியில் புதைத்துவைக்கும் பழக்கத்தை கையாண்டு வந்தனர். இதனால் இன்றளவும் நம் வீடுகளில் புதுபிக்கும் போதும், கிணறு மற்றும் வேறு நீர் ஆதாரங்களுக்காக பூமியை தோண்டும் போதும், முன்னோர்கள் புதைத்து வைத்திருந்த பொருட்கள் கிடைத்து வருகின்றன.

இதே போல் இங்கிலாந்தில் 17ம் நூற்றாண்டில் பூமிக்கடியில் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் புதைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அவை இப்போது கிடைத்திருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

தெற்கு இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் ராபர்ட் ஃபூக்ஸ் - பெட்டி தம்பதியினர். இவர்கள் தங்கள் 400 ஆண்டுகள் பழமையான வீட்டை புதுப்பிக்க எண்ணியுள்ளனர். அதற்காக வீட்டின் சமயலறையை தோண்டும் பொழுது, அவர்களுக்கும் ஆச்சர்யமளிக்கும் விதமாக ஏதோ ஒரு பொருள் கீழே தட்டுப்பட்டுள்ளது.

ராபர்ட் ஃபூக்ஸ் - பெட்டி தம்பதியினர்

அதை உடைத்து பார்த்த ராபர்ட் ஃபூக்ஸ் ஆச்சர்யமடைந்துள்ளார். காரணம் எலிசபெத் 1, சார்லஸ் 1, பிலிப் மற்றும் மேரி உட்பட்ட பல்வேறு ஆட்சிக்கால தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை அதனுள் இருந்துள்ளன. அதுவும் ஒன்றோ இரண்டோ அல்ல 1000-க்கும் மேற்பட்ட நாணயங்கள்.

கிடைக்கப்பெற்ற பழங்கால நாணயங்கள்

நாணயங்களை கண்டுபிடித்தவுடன் ஃபூக்ஸ் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள், அந்த கலைப்பொருட்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு, சுத்தம் செய்து அடையாளம் காண அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஃபூக்ஸின் மனைவி பேசுகையில், ”என் கணவர் வீட்டை புதுப்பிக்க நினைத்து வீட்டின் சமையலறையை ஆழப்படுத்தினார். அப்பொழுது இந்த நாணயங்கள் கிடைத்தன.

கிடைக்கப்பெற்ற பழங்கால நாணயங்கள்

இன்னும் ஏதாவது கிடைக்குமா என்ற ஆவலில் அவர் இன்னும் அவ்விடத்தைவிட்டு வரவில்லை” என்று கூறியிருக்கிறார். இந்த நாணயங்களின் மதிப்பு 65,000 டாலர் (இன்றைய தேதியில் இந்திய ரூபாயில் சுமார் 62 லட்சம்) என சொல்லப்படுகிறது.