உலகம்

நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி: விஜய் மல்லையா மேல்முறையீடு!

நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி: விஜய் மல்லையா மேல்முறையீடு!

webteam

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, தொழிலதிபர் மல்லையா லண்டனில் குடியேறினார். அவரை இந்தியா வுக்கு அழைத்துவர சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. மல்லையாவை நாடு கடத்தலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

மல்லையாவை நாடு கடத்துவது குறித்து பரிசீலனை செய்ய அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. 

இந் நிலையில், மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க, இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை எதிர்த்து  மேல்முறையீடு செய்ய இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.