வாடகைக் கார் நிறுவனமான உபர் கடலுக்குள் செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
வாடகை கார் நிறுவனங்களில் புகழ்பெற்றுள்ள உபர் நிறுவனம் தற்போது நீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து கடலுக்குள் இறக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் கடலுக்கு அடியில் செல்லும் வாகனத்தை உபர் நிறுவனம் சோதனை செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்காக இந்த வாகனத்தை உபர் நிறுவனம் தயாரித்துள்ளது.
ScUber என பெயரிடப்பட்ட இந்த வாகனத்தில் இரண்டு பேர் பயணிக்கலாம். ScUber கடலுக்கடியில் 20 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியது. இந்த வாகனத்தில் சென்று கடலுக்கடியில் உள்ள பவளப்பாறைகளை பார்வையிட ஒரு பயணியிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ. 70 ஆயிரம் ரூபாய் வசூலிக்க உபர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மே27 முதல் ஜூன் 18 வரைக்குள் நீர்மூழ்கி வாகனம் மூலம் பவளப்பாறையை பார்வையிட முடியுமென்றும், காண விரும்பும் சுற்றுலா பயணிகள் உபரின் பிரத்யேக செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.