உலகம்

கால் டாக்ஸி ஓட்டுநர்கள் நூதனப் போராட்டம்

கால் டாக்ஸி ஓட்டுநர்கள் நூதனப் போராட்டம்

webteam

ஸ்பெயின் நாட்டில் ஊபர் மற்றும் காபிஃபி நிறுவனங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஓட்டுனர்கள் வாகனங்களை மெதுவாக இயக்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

மாட்ரிட் நகரில் ஊபர் மற்றும் காபிஃபி நிறுவனங்களை சேர்ந்த ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு மெதுவாக வாகனத்தை ஓட்டிச் சென்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் செயலியை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஊபர் மற்றும் காபிஃபி கால் டாக்ஸி சேவைகளின் உரிமத்தை ஸ்பெயின் அரசு குறைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். சேவை உரிமம் ரத்து செய்யப்பட்டதால் ஊபர் மற்றும் காபிஃபி டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக போராட்டத்தின் போது அவர்கள் முழக்கம் எழுப்பினர். ஓட்டுநர்களின் இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.