உலகம்

ராணுவ உடையுடன் வீரர்கள் டிக்டாக் செய்யாதீர்கள் - அமெரிக்கா வலியுறுத்தல்

ராணுவ உடையுடன் வீரர்கள் டிக்டாக் செய்யாதீர்கள் - அமெரிக்கா வலியுறுத்தல்

webteam

ராணுவ வீரர்கள் தாங்கள் பணியில் இருக்கும் போதோ அல்லது ராணுவ உடையில் இருந்துக் கொண்டோ டிக் டாக் செயலியில் வீடியோ பதிவிடக்கூடாது என அமெரிக்க ராணுவம் அறிவுறுத்தியுள்ளது

இளைஞர்களை அதிகம் கவர்ந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ‘டிக்டாக்’ செயலி இருந்து வருகிறது. இந்தச் செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி, நடனம் ஆடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். பலர் தங்களது நடிப்புத் திறமையை டிக் டாக்கில் வெளிப்படுத்தி சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியுள்ளனர். 

பொழுதுபோக்காக தொடங்கும் டிக்டாக்களுக்கு சிலர் அடிமையாகவும் மாறிவிடுகின்றனர். சிலர் தங்களின் நேரத்தை எல்லாம் டிக் டாக்கிலேயே செலவிடுகின்றனர். வயது வித்தியாசமின்றி பலரும் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். செய்யும் வேலைகளில் கவனம் செலுத்தாமல் டிக்டாக் வீடியோ பதிவிட்டு நேரம் கடத்துபவர்களும் எல்லா துறைகளிலும் உண்டு.

இந்நிலையில் டிக்டாக் தொடர்பான அறிக்கையொன்றை அமெரிக்க ராணுவ தலைமை அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி அமெரிக்காவின் ராணுவ வீரர்கள் தாங்கள் பணியில் இருக்கும்போதோ அல்லது ராணுவ உடையில் இருந்துக் கொண்டோ டிக் டாக் செயலியில் வீடியோ பதிவிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளது. இளம் ராணுவ வீரர்கள் சிலர் டிக் டாக்கில் ராணுவ உடையுடன் பதிவிட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தலை அமெரிக்கா வழங்கியுள்ளது.