ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற சிரியாவின் ரக்கா நகரில் சண்டையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடும் யுத்தம் நடந்து வரும் சிரியாவின் ரக்கா நகரில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் அவை கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போர் முனையில் சிக்கியிருப்பதால், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் சண்டையை நிறுத்த வேண்டியது அவசியம் என ஐ.நா. வலியுறுத்தியிருக்கிறது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கடைசித் தளமாகக் கருதப்படும் ரக்கா நகரில் கடந்த சில மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவிலான கிளர்ச்சிக் குழுவினர் சண்டையிட்டு வருகின்றனர்.