பிலிப்பைன்ஸ் நாட்டில் ஃபங் வாங் என்ற அதிபயங்கர புயல் தாக்க உள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்புயல் மணிக்கு 230 கிலோ வேகத்தில் தாக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
ஃபங் வாங் புயல் காரணமாக இப்புயலுக்கு சூப்பர்புயல் என்றே பெயர்வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைஅமைச்சர் தலைமையில் பாதுகாப்புமீட்பு பணிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரம்வீசிய கல்மேகி புயல் பாதிப்புகளே கடுமையாக உள்ள நிலையில், ஃபங் வாங் காரணமாக தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு நீங்கும் முன்பே அதை விட மோசமானபுயல் வர உள்ளது பிலிப்பைன்ஸ் மக்களை பீதியில் தள்ளியுள்ளது. தற்போது வந்து கொண்டுள்ள புயலின்பரப்பு அதிகமாக உள்ளதால் பாதிப்பும் கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது. புயல் நகர்ந்து வரும் பாதையின் செயற்கைக்கோள் படமே அச்சுறுத்தும்வகையில் உள்ளது.