அமெரிக்காவில் பூமியில் ஏற்பட்ட பிரம்மாண்ட புதைகுழியில் இரண்டு கட்டிடங்கள் புதையுண்ட சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பூமியில் ஏற்பட்ட பிரம்மாண்ட புதைகுழியில் இரண்டு கட்டிடங்கள் புதையுண்டன. திடீரென பூமியில் ஏற்பட்ட புதைகுழியில் கட்டிடங்கள் புதைந்ததை தொடர்ந்து அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்போர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சிறியதாக ஏற்பட்ட பிளவு கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்ததால் இரண்டு கட்டிடங்கள் பூமிக்கடியில் புதைய காரணமாகி விட்டன.
தற்சமயம் பூமியில் விரிவடைந்து வந்த பிளவு நின்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரு கட்டிடங்களை முழுமையாக உள் இழுத்துக்கொண்ட புதைகுழி முழுவதும் கழிவு நீர் சூழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அருகில் உள்ள ஏரி வரை இந்த பாதிப்பு நீளும் என்ற அபயாம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு பணிகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.