பெல்ஜியம் நாட்டில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் இமானி, ஹெர்மென் ஆகிய நீர் யானைகளுக்கு சளி இருந்ததை அடுத்து அவற்றை தனிமைப்படுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு நீர் யானைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பணியாளர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் நீர் யானைகளுக்கு எப்படி கொரோனா பரவியது என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.