உலகம்

வுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா உருவாகியதா? வைரஸ் நிபுணரின் நீக்கப்பட்ட டிவிட்டர் கணக்கு

webteam

சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகக் கூறிய வைரஸ் அறிவியல் நிபுணர் லீ மிங்க் யானின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனா தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த விவகாரத்தில் லீ மிங்க் யான் குற்றம்சாட்டப்பட்டதும், சீனாவை விட்டு அவர் வெளியேறியுள்ளார். சீனா உள்நோக்கத்துடன் கொரோனை வைரஸை உருவாக்கி பரப்பியதாகக் கூறியதால், அவரது டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது.

 "லீ மிங்க் யானின் டிவிட்டர் கணக்கு நீக்கப்படுகிறது. டிவிட்டர் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது" என்று ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை லீ மீங்க் டிவிட்டரில் வெளியிட்டுவந்தார். சீனாவில் உள்ள வைரலாஜி பரிசோதனை மையத்தில் வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், அது உணவு சந்தையில் இருந்து பரவவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது லீ மிங்க் யான் அமெரிக்காவில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னைப் பற்றிய பொய்ச் செய்திகளை சீன அரசு பரப்புவதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.