உலகம்

ஊழியர்களுக்கு 'work From Home'ஐ நிரந்தரமாக்கிய ட்விட்டர்?

webteam

ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாகவே ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலகநாடுகள் போராடி வருகின்றன. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை கொரோனாவால் பீதியடைந்துள்ளன. உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றன. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தவாறே வேலை செய்ய அனுமதித்துள்ளன

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாகவே ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ட்விட்டர் நிறுவனர் ஜாக், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும், அதில், 'கொரோனா முடிவுக்கு வந்த பிறகும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம்.

நேரில் சென்று வேலை பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ள ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வந்தால் போதுமானது.நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்ற உண்மையை கடந்த மாதங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன என தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் 2020 முழுவதுமே வீட்டில் இருந்து வேலை பார்க்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது