உலகம்

'என்னது காஃபி ஷாப் ஊழியரா இல்ல ட்விட்டர் சிஇஓவா'-பார்ப்போரை ஷாக்காக வைக்கும் புகைப்படங்கள்

'என்னது காஃபி ஷாப் ஊழியரா இல்ல ட்விட்டர் சிஇஓவா'-பார்ப்போரை ஷாக்காக வைக்கும் புகைப்படங்கள்

JustinDurai

ட்விட்டர் நிறுவன சிஇஓ பராக் அகர்வால், காபி ஷாப் ஊழியர்போல் ஆர்டர் கேட்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பராக் அகர்வால். இவர் கடந்த வாரம்  ட்விட்டர் நிறுவனத்தின் இங்கிலாந்து அலுவலகத்துக்கு திடீர் விசிட் சென்றிருந்தார். இந்நிலையில், அங்கிருந்தோரிடம் பராக் அகர்வால் காபி ஷாப் ஊழியர்போல் ஆர்டர் கேட்கும் வகையிலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. பராக் அகர்வாலுடன் இங்கிலாந்து ட்விட்டரின் நிர்வாக இயக்குநர் தாரா நாசர், ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இருந்தனர். அப்போது நெட் சேகல் அங்கிருந்தோருக்கு பிஸ்கெட்டுகள் பரிமாறினார்.

பராக் அக்ரவால் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். கடந்த ஆண்டு நவம்பரில் ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பராக் அகர்வால், எலான் மஸ்க்-க்கு ட்விட்டர் நிறுவனம் கைமாறும் வரை அவரது பொறுப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.