அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் தாக்கியதன் 16-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரங்கள் மீது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலால் அமெரிக்காவே நிலைகுலைந்துபோனது. உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தின் 16-வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமெரிக்கா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள், சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.