உலகம்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.... 38 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.... 38 பேர் உயிரிழப்பு

webteam

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 38 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 72 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநர் காபூலில் உள்ள அமெரிக்கா பல்கலைகழகம் அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 38 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 72 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம், தற்கொலை படையை சேர்ந்த ஜபிகுல்லா முஜாஹித் பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து பலத்த சத்தத்துடன் இரண்டு குண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அந்நாட்டு உள்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.