இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நேரடியாகவே அதிர்ச்சி கொடுத்துள்ளது துருக்கி...இதற்கு ரஷ்யா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது...ரஷ்யாவை துருக்கி சீண்டுவது ஏன்..? அடுத்து நடக்கப்போவது என்ன விரிவாக பார்க்கலாம்..
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்தது..இஸ்ரேல் ராணுவம் காசவில் உள்ள குடியிருப்புகள் மருத்துவமனைகள், அப்பாவி மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தின..இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர் ...பலர் வீடுகள் உறவுகளை இழந்து ஒரு வேளை உணவுக்கே கையேந்தி வருகின்றனர்.
"இஸ்ரேல் பிரதமரின் இந்த செயல் மனித உரிமை மீறல் என ஐநா பகிரங்கமாக குற்றம் சாட்டியது..இதனைப் பொருட்படுத்தாத இஸ்ரேல் மீண்டும் காசா மக்கள் மீது தாக்குதல் நடத்தியது..
இந்த நிலையில், கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வேதச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது...அதே சமயம் ஸ்பெயின், அயர்லாந்து, உள்ளிட்ட பல நாடுகள் நெதன்யாகு தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்தால் கைது செய்வோம் என சூளுரைத்தன..
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்கு வந்தால், "அவரை நிச்சயம் கைது செய்வேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
அதே போல, காசா மக்களின் இனப்படுகொலையை முன் வைத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து, இஸ்தான்புல் தலைமை அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், " காசா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரானது..இந்த குற்றங்களை செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகள் 37 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
அந்த அறிக்கையில் இடப்பெற்றுள்ள அதிகாரிகள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை..ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ், ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்து.
கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கியின் செயலை ஹமாஸ் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்..அதே சமயம் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"இது ஒரு விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை என்றும் இது ஒரு நாடகம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
காசா மக்கள் மீதான தாக்குதலை எப்போதும் நேரடியாக விமர்சிக்கும் முக்கிய நாடுகளில் துருக்கியும் ஒன்று. கடந்தாண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் நடத்தியது இனப்படுகொலை என துருக்கி குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.