உலகம்

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

EllusamyKarthik

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெளமரே அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2004 டிசம்பரில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகள் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடகத்தக்கது.