உலகம்

ஆஸ்திரேலியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு

ஆஸ்திரேலியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு

rajakannan

ஆஸ்திரேலியா அருகே நியூகலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் நியூகலிடோனியா, வானுவாட்டு உள்ளிட்ட பல்வேறு தீவுகள் உள்ளன. நியூகலிடோனியா தீவுக்கு அருகில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தை அடுத்து ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வனுவாட்டு தீவின் தெற்கு மாகாணத்தின் கடற்பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.