மெக்ஸிகோ புதியதலைமுறை
உலகம்

ட்ரம்பின் குடியுரிமை உத்தரவு | அகதிகளுக்காக மெக்சிகோ எல்லையில் அமைக்கப்படும் கூடாரங்கள்!

அமெரிக்க அதிபராக் டொனால்ட் ட்ரம் பதவி ஏற்றதும், சில கட்டுப்பாடுகளை விதித்ததுடன், வரி விதிப்பு மற்றும் சில ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று குடியுரிமை சட்டம்.

Jayashree A

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், சில கட்டுப்பாடுகளை விதித்ததுடன், வரி விதிப்பு உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று குடியுரிமை சட்டம். அதாவது, குடியுரிமை பெறாத மக்கள் அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அமெரிக்க அதிபரின் அதிரடி நடவடிக்கையை இந்தியா உள்பட சில நாடுகள் வரவேற்றுள்ளது.

அதன்படி, அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்படும் அகதிகளுக்காக மெக்சிகோவில் தங்குமிடங்கள் அமைக்கப்பட்ட வருகின்றன. சியுடாட் ஜுவரெஸ் எல்லையில் அகதிகள் கூடாரங்களை மெக்சிகோ ராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். அவர்களுக்கான குடிநீர், உணவு வசதிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்படுகிறது.

இதனால் மெக்சிகோ வழியாக செல்லும் அகதிகள் அமெரிக்க எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள 9 நகரங்களில் திருப்பி அனுப்பப்படும் அகதிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே மெக்சிகோவைச் சாராத அகதிகளை ஏற்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறியுள்ளார்.