அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் மாணவர்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான மானியங்கள் உள்ளிட்ட வழிகளில் வழங்கப்பட வேண்டிய 18 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதியை, ட்ரம்ப் அரசு நிறுத்திவைத்துள்ளது.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இஸ்ரேல் எதிர்ப்பு, இடதுசாரி ஆதரவு போராட்டங்கள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள ட்ரம்ப், போராட்டங்களுக்கு அனுமதியளிக்கும் பல்கலைக்கழகங்களுக்கான மானியங்கள், நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.