உலகம்

வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார்‌ ட்ரம்ப்

வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார்‌ ட்ரம்ப்

webteam

வெள்ளத்தால் பாதிக்‌கப்பட்ட டெக்சாஸ் மாகாண‌த்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை பார்வையிடச் செல்லவுள்ளதாக வெள்ளை ‌மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கி‌ன்றன.

டெக்சாஸ் மாகாணத்தை புர‌ட்டிப் போட்ட ஹார்வே புயலுக்கு இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்ப‌தாக கூறப்படுகிறது. புயலால் ‌ஏற்பட்டுள்ள சேதத்தில் இருந்து மீண்டு‌வர பல ஆண்டுகள் ஆகும் என அவசரகால மேலாண்மை முகமை இய‌க்குநர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொ‌டர்ந்து காணொலி காட்சி மூலம் மாகாண நிர்வாகத்தை தொடர்பு கொண்ட அதிபர் ட்ரம்ப், டெக்சாஸ் மற்றும் லூசியானா மாகாண ஆளுநர்களுக்கு தேவையான உதவிகளை அரசின் அனைத்து துறைகளும் வழங்‌க வேண்டும் என கேட்டுக் கொ‌ண்டார்.