உலகம்

பாலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்துவோம்: ட்ரம்ப் மிரட்டல்

webteam

பாலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கு இனி உதவி கிடைக்காது என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் உதவிக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். 

இது பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாலஸ்தீனத்துக்கான நிதி உதவியை நிறுத்தப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாலஸ்தீனத்துக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்கா சார்பில் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.