உலகம்

கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை.. திணறிய அமெரிக்க நாடாளுமன்றம் - புகைப்பட ஆல்பம்

webteam

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் 6 மணிநேரத்திற்கு பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து நாடாளுமன்றம் தொடங்கியது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை உறுதி செய்யும் இறுதிகட்ட நடவடிக்கையாக தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, சான்றிதழ் வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சித்ததால் மோதல் மூண்டது. தொடர்ந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து செனட் கூட்டம் மீண்டும் தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை துணை அதிபர் மைக் பென்ஸ் கொண்டுவந்தார்.

வன்முறையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.