அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  ட்ரம்ப்
உலகம்

கடைசி வரை மனமிறங்காத டிரம்ப்.. வல்லரசு நாட்டுக்கே இந்த நிலையா? ஆடிபோய் நிற்கும் அமெரிக்க மக்கள்!

அமெரிக்காவின் இந்த நிதி முடக்கத்தால், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

விமல் ராஜ்

மொத்த அமெரிக்காவும் முடங்கி கிடக்கும் இக்கட்டான சூழலில் டிரம்ப் பேசியுள்ள வார்த்தைகள் தான் அமெரிக்க மக்களை அதிர வைத்துள்ளது.அவர் பேசியது என்ன பார்க்கலாம்!

அமெரிக்க கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்..இவரது உத்தரவு உலக நாடுகளை பாதிப்பது மட்டுமின்றி உள் நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

trump

இதில் குறிப்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் அறிவித்த திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ,டிரம்ப் கொண்டு வரும் ஒவ்வொரு மசோதாக்களையும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்த்து வருகிறது. இதன் காரணமாக இந்தாண்டு விடுவிக்கப்படும் நிதியை விடுவிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நிதி முடக்கத்தால், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அது சமயம் பல அரசு ஊழியர்கள் ஊதியமே இல்லாமல் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..

அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால், அமெரிக்கா அரசு ஆட்டம் காண தொடங்கியுள்ளது..அதே சமயம் அரசு துறைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

TRUMP

இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், "மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் வரி சலுகைகளை நீட்டிக்கக் கோரும் ஜனநாயகக் கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்றும், பணி நிறுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவேன்.. பெரும்பாலான சட்டங்களுக்கு 60 சதவிகித வாக்குகள் தேவைப்படும் முறையை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்..