உலகம்

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்க ட்ரம்ப் திட்டம்

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்க ட்ரம்ப் திட்டம்

webteam

பாதுகாப்புத் துறைக்கான நிதியை 9 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆளுநர்களுக்கு ட்ரம்ப் அளித்த விருந்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடை அதிகப்படுத்த இருப்பதாகக் குறிப்பிட்டார். பட்ஜெட்டில் ராணுவத்துக்கு கூடுதலாக 54 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ள ட்ரம்ப், பாதுகாப்புத் துறை அல்லாத மற்ற துறைகளுக்கான நிதி மற்றும் வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியுதவி போன்றவற்றையும் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ஆண்டுதோறும் 600 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ராணுவத்துக்காக அமெரிக்கா செலவழிக்கும் தொகையானது, சீனா, இந்தியா ரஷ்யா உள்ளிட்ட 7 பெரிய நாடுகள் செலவழிக்கும் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.