US air strikes  web
உலகம்

"ஈரான் என்ற நாடு இருக்காது" கண் சிமிட்டிய அதிபர் டிரம்ப்.. சீறிய அமெரிக்கா படைகள்..!

ஹார்முஸ் நீரிணை பதற்றம் உச்சம்: டிரம்ப் உத்தரவால் ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் கடும் வான்தாக்குதல்

PT WEB

மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், அமெரிக்க எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதையடுத்து டிரம்ப் உத்தரவால் அமெரிக்க ராணுவம் ஈரானின் ட்ரோன், ஏவுகணை, கடலோர ரேடார் தளங்கள் உள்ளிட்ட 10 ராணுவ இலக்குகளை குறிவைத்து கடும் வான்தாக்குதல் நடத்தியது.

டிரம்ப் சிக்னலுக்காக காத்திருந்த அமெரிக்கா படைகள்.. அவர் சிக்னல் கொடுத்த அடுத்த சில வினாடிகளில் அமெரிக்க படைகள் புல்லட் மழை பொழிந்துள்ளன.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலால் ஈரான் படைகள் நிலைகுலைந்து போயுள்ளன.. தாக்குதல் சம்பவம் அரங்கேறியது எப்படி பார்க்கலாம்!

மத்தியக் கிழக்கில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டது. ஹார்முசை அனுமதி இன்றி கடக்கும் கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது..

Trump

அந்த வகையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்க எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் ஈரான் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது..

ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவ விமானங்கள் ஹார்முஸ் ஜலசந்தியிலும் அதன் அருகிலும் உள்ள பல இடங்களில் 10 ஈரானிய ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்கியதாக அமெரிக்க மத்தியப் படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிபர் டிரம்ப்...அந்த பதிவில் "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன...இனி நியாயமாக நடந்துகொள்ள முடியாத ஒரு நிலை கூட வரலாம் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்..

US air strikes

அதுமட்டுமன்றி தொடர்ந்து இதே நிலை நீடித்தால், ஈரான் என்ற ஒரு நாடே இருக்காது என்றும் மீண்டும் போர் நிறுத்தம் மீறப்பட்டால் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்..டிரம்பின் இந்த எச்சரிக்கை தான் மேலும் போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது..