உலகம்

அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு: ட்ரம்ப் மருமகன் விசாரணைக்கு ஆஜராகிறார்

அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு: ட்ரம்ப் மருமகன் விசாரணைக்கு ஆஜராகிறார்

webteam

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக விசாரித்து வரும் நாடாளுமன்ற குழுவின் முன் டொனால்ட் ட்ரம்ப் மருமகன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் நேரடி தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை விசாரணை நடத்தி வருகிறது.  

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மூத்த மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியரை விசாரணைக்கு அழைக்க தனக்கு அதிகாரம் இருப்பதாக இந்த விசாரணையை நடத்தும் குழு தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை ட்ரம்ப் ஜூனியருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. தேவைப்பட்டால் விசாரணைக்கு அவரையும் அழைப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டொனால்ட் ட்ரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு நிர்வாகி பால் மனபோர்ட் மற்றும் கிளென் சிம்சன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டொனால்டு ட்ரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர், செனட் சபையின் புலனாய்வு குழுவின் முன் வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார்.